சேது சமுத்திர திட்டத்திற்கு பாஜக நிபந்தனை

ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் முன்னெடுக்கப்பட்டால் பாஜக ஆதரவு வழங்கும்: அண்ணாமலை தெரிவிப்பு

by Staff Writer 14-01-2023 | 8:28 PM

India: ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாத வகையில், மத்திய அரசாங்கத்துடன் இணைந்து புதிய பாதை கண்டுபிடிக்கப்படுமாக இருந்தால், சேது சமுத்திர திட்டத்தை  பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கும் என தமிழக மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டுவந்த  தனித் தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுகளைக் கொண்ட பகுதி இராமர் பாலம் எனவும் ஸ்ரீ ராம்சேது எனவும் வணக்கத்திற்குரிய புனித பகுதியாக இந்துக்களால் போற்றப்படுகின்றது. 

இந்த 16 மணல் திட்டுகளில் 8 மணல் திட்டுகள் இலங்கைக்கும் எஞ்சிய 8  இந்தியாவிற்கும் உரித்துடையவையாகும்.