.webp)
Colombo (News 1st) தற்போது நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள புற்றுநோய்க்கான 43 வகை மருந்துகள் அடுத்த மாதமளவில் கிடைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்திய கடனுதவி மற்றும் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மருந்து வகைகள் கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஶ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டார்.
தட்டுப்பாடு நிலவும் மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வௌியானதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
மருந்துகள் கிடைக்கும் வரை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டிலுள்ள ஏனைய புற்றுநோய் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு இயலுமானவரை மருந்துகளை பகிர்ந்து வழங்குவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.