.webp)
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமுள்ள மாவனெல்லை பிரதேச சபையின் தலைவர் 20 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தேச கட்டட நிர்மாண திட்டத்திற்கு பிரதேச சபையின் அனுமதியை வழங்குவதற்காக 20 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக அவர் கோரியுள்ளார்.
இன்று காலை மாவனெல்லையிலுள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் வைத்து, பணத்தை வாங்கிய போது பிரதேச சபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை மாவனெல்லை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.