அரசியலமைப்பை மீறுவோருக்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் தண்டனை பெற்றுக்கொடுக்கும்: S.M.மரிக்கார்

by Bella Dalima 13-01-2023 | 7:09 PM

Colombo (News 1st) அரசியலமைப்பை மீறும் தரப்பினர் தொடர்பில் ஆராய்வதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் S.M.மரிக்கார் குறிப்பிட்டார். 

ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி எவரேனும் தேர்தலை பிற்போட முயற்சித்தால், அது அரசியலமைப்பை மீறும் செயல் என மரிக்கார் சுட்டிக்காட்டினார். 

அவ்வாறு அரசியலமைப்பை மீறுவோருக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் 2023 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெறும் பட்சத்தில், அரசியலமைப்பை மீறும் அனைவருக்கும் எதிராக சட்ட ரீதியில் தண்டனை பெற்றுக்கொடுக்க கட்டாயம் ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாகவும் மரிக்கார் தெரிவித்தார்.