சதொசவில் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

சதொசவில் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

by Bella Dalima 12-01-2023 | 3:44 PM

Colombo (News 1st) நான்கு பொருட்களுக்கான விலையை சதொச குறிப்பிடத்தக்களவு குறைத்துள்ளது.

இதற்கமைய, சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 220 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வௌ்ளை பச்சை அரிசி 16 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 189 ரூபாவாகும்.

நாட்டரிசி ஒரு கிலோகிராம் 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 198 ரூபாவாகும்.

மேலும் குரக்கன் மா ஒரு கிலோகிராம் 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அதன் புதிய விலை 240 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.