இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் ​ போட்டியில் இந்தியா 4 விக்கெட்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் ​ போட்டியில் இந்தியா 4 விக்கெட்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் ​ போட்டியில் இந்தியா 4 விக்கெட்களால் வெற்றி

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2023 | 10:05 pm

Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒரு  நாள் ​ போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 39.4 ஓவர்கள் நிறையில், சகல விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை சார்பில் நுவனிந்து பெர்னாண்டோ 50 ஓட்டங்களை பெற்றதுடன், குசல் மென்டிஸ் 34 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் மொஹம்மட் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.

219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா 43.2 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கினை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றதுடன், ஹார்திக் பாண்டியா 36 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் லஹிரு குமார மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில்  2-0 என்ற ரீதியில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்