நெற்செய்கையில் மஞ்சள் புள்ளி ஏற்பட இதுவே காரணம்

நெற்செய்கையில் மஞ்சள் புள்ளி நோய்த்தாக்கம் ஏற்பட்டமைக்கான காரணம் வௌியானது

by Rajalingam Thrisanno 11-01-2023 | 3:13 PM

கடந்த மூன்று போகங்களாக அடிக்கட்டுபசளை, யூரியா, பண்டி உரம் என்பவற்றை உரிய முறையில் பயன்படுத்தாத காரணத்தாலேயே நெற்செய்கையில் மஞ்சள் புள்ளி நோய்த்தாக்கம் எற்பட்டுள்ளதென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய்த்தாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நெல்வயல்களில் உவர்த்தன்மை கூடியுள்ளதாகவும் மஞ்சள்புள்ளி நோய், பூச்சித்தாக்கம் என்பன அதிகரித்துள்ளதாவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மஞ்சள் புள்ளி நோய் தொடர்பில் விவசாய நியுணர்கள் குழுவொன்று ஸ்தாபிக்க்பட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.