இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தெரிவு

by Staff Writer 11-01-2023 | 10:26 PM

Colombo (News 1st) 2023- 2024 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன இன்று தெரிவு செய்யப்பட்டார். 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்ததோடு, செயலாளர் பதவிக்காக சட்டத்தரணி இசுரு பலபட்டபெந்தி வேட்புமனு  தாக்கல் செய்தார்.

குறித்த பதவிகளுக்காக வேறு எவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை.

அதற்கமைய, சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன சங்கத்தின் தலைவராகவும் சட்டத்தரணி  இசுரு பாலபட்டபெந்தி செயலாளராகவும் தெரிவாகியுள்ளனர்.

வேட்பு மனு ஏற்கும்  நடவடிக்கைகள் சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி இந்திகா தேவ்முனி தலைமையில் இடம்பெற்றன.