.webp)
இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்க முடியாதென கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
விலங்குகள் அல்லது விலங்குசார் உற்பத்திகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் போது அதன் மூலம் நோய்கள் பரவாது தடுப்பது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பொறுப்பாகுமென பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமாலி கொத்தலாவல நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு கூறினார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒருவகை பறவைக்காய்ச்சல் பரவிவருவதன் காரணமாக முட்டை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்க முடியாதென அவர் தெரிவித்தார்.
திணைக்களத்தின் நிலைப்பாட்டை அரச வணிக கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹேமாலி கொத்தலாவல குறிப்பிட்டார்.