ஷாப்டர் மரணம்: சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு

தினேஷ் ஷாப்டர் மரணம்: சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு

by Bella Dalima 10-01-2023 | 4:57 PM

Colombo (News 1st) மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஆரம்ப நீதவான் விசாரணை இன்று இரண்டாவது நாளாகவும் கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரியவின் உத்தியோகபூர்வ அறையில் இடம்பெற்றது.

இதன்போது, தினேஷ் ஷாப்டரின் சகோதரர் ஒருவரிடம் சுமார் 45 நிமிடங்களுக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சாட்சி விசாரணைகள் நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் இடம்பெற்றதால், இது தொடர்பான செய்திகளை பதிவு செய்வதற்கான வாய்ப்பு ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கவில்லை.

மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெறுமென மேலதிக நீதவான் இதன்போது தெரிவித்துள்ளார்.