பிரேஸில் ஜனாதிபதி மாளிகை, உச்சநீதிமன்றம் முற்றுகை

முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களால் பிரேஸில் ஜனாதிபதி மாளிகை முற்றுகை

by Staff Writer 09-01-2023 | 7:42 AM
Colombo (News 1st) பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோவின்(Jair Bolsonaro) ஆதரவாளர்களால் அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியன முற்றுகையிடப்பட்டுள்ளன. நாட்டின் ஜனாதிபதியாக லூலாடா சில்வா மூன்றாவது தடவையாக பதவியேற்று ஒரு வாரம் கடந்த நிலையில், நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரேஸில் கால்பந்தாட்ட ஆடைகள் மற்றும் கொடிகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்சநீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்த அரசாங்க கட்டடங்கள் காணப்படும் பிரதான வீதி உட்பட தலைநகரின் மையப்பகுதியை 24 மணித்தியாலங்களுக்கு மூடுமாறு நாட்டின் புதிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். சுமார் 170 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.