கலால்வரி திணைக்களத்திற்கு 2022-இல் அதிக வருமானம்

கலால்வரி திணைக்களத்தின் வரலாற்றில் 2022ஆம் ஆண்டில் அதிக வருமானம்

by Staff Writer 08-01-2023 | 2:40 PM

Colombo (News 1st) கலால்வரி திணைக்களத்தின் வரலாற்றில் 2022ஆம் ஆண்டிலேயே அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 170 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ள அதேநேரம், இந்த வருடத்தில் 217 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக கலால்வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 200 ஊழியர்களுக்கான பற்றாக்குறை நிலவிய சூழ்நிலையிலும் கடந்த வருடத்தில் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதேவேளை, உள்நாட்டு மதுபான உற்பத்திக்கான தரச் சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க, சந்தைகளிலுள்ள அதிக மதுபான வகைகளுக்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.