பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த அங்கீகாரம்

பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த அங்கீகாரம்

by Bella Dalima 07-01-2023 | 5:51 PM

'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஹாங்காங்கில் நடைபெறவுள்ள 16 ஆவது ஆசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த காஸ்ட்யூம் டிசைன், சிறந்த புரொடக்ஷன் டிசைன் என 6 பிரிவுகளில் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
 
'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் எதிர்வரும் ஏப்ரம் 28 ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டு கால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். 

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். 

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

A milestone achievement! Six nominations at the 16th Asian Film Awards!

Best Film - Ponniyin Selvan: Part 1
Best Original Music @arrahman
Best Editing @sreekar_prasad
Best Production Design #ThotaTharrani
Best Cinematography @dop_ravivarman
Best Costume Design @ekalakhani pic.twitter.com/tQU8EvdCFo

— Lyca Productions (@LycaProductions) January 7, 2023