Laugfs எரிவாயு விலை குறைப்பு

Laugfs எரிவாயு விலை குறைப்பு

by Bella Dalima 06-01-2023 | 3:31 PM

Colombo (News 1st)  லாப்ஸ் (LAUGFS)  சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு விலை குறைப்பிற்கு அமைவாக, லாப்ஸ் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்திற்கு அமைய, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5080 ரூபாவிற்கு விற்பனையாகின்றது.

05 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2032 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைத் திருத்தத்திற்கு அமைவாக, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சமையல் எரிவாயுவின் விலை தீர்மானிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.