மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரதம்

by Bella Dalima 06-01-2023 | 5:30 PM

India: இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 38  பேர் உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவிற்கு முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்டபோது, கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 38 இலங்கையர்கள் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  

தடுத்து வைக்கப்பட்ட 38  இலங்கையர்களும் இன்று முதல் தொடர் உண்ணாவிரதத்தை  முன்னெடுத்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.