தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்

by Bella Dalima 06-01-2023 | 6:01 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி விடுத்த அழைப்பிற்கு ஏற்ப இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இந்த கலந்துரையாடலில் சட்டமா அதிபரும் பங்குபற்றியிருந்தார்.

அரசியலமைப்பு அல்லது நீதிமன்ற நடவடிக்கை தவிர்ந்த வேறு நடவடிக்கைகள் ஊடாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை தடுப்பதற்கு சாத்தியமில்லை என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியை தௌிவுபடுத்தியதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.