சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்கவிற்கு விளக்கமறியல்

by Bella Dalima 06-01-2023 | 5:05 PM

Colombo (News 1st) சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் தரங்கா மஹவத்த முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேபால் அமரசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று (05) மாலை கைது செய்யப்பட்டார்.

தலதா மாளிகையை நிந்திக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.