முதற்கட்டமாக 5 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

முதற்கட்டமாக 5 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

முதற்கட்டமாக 5 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

எழுத்தாளர் Bella Dalima

06 Jan, 2023 | 4:17 pm

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதி அடுத்த வார இறுதியில் நாட்டிற்கு கொண்டுவரப்படும் என இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்தது. 

முதற்கட்டமாக 5 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த முட்டையொன்று 42 ரூபா எனும் விலையில் நுகர்வோருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வர்த்தக அமைச்சின் கீழுள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக முட்டைகளை நுகர்வோருக்கு விநியோகிக்க முடியும் எனவும் ஆசிறி வலிசுந்தர  தெரிவித்தார். 

தனியார் விற்பனையாளர்கள், பாரிய அளவிலான முட்டை விற்பனையாளர்களின் ஊடாகவும் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்