வசந்த முதலிகேயின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் பேரணிகள் முன்னெடுப்பு

by Bella Dalima 05-01-2023 | 7:48 PM

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கோரி இன்று பிற்பகல் கொழும்பில் இரண்டு பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் போராட்டக்கள  செயற்பாட்டாளர்கள் பலரும் இன்று பிற்பகல் மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஒன்று கூடி வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினர்.

எனினும், அவர்கள் பேரணியை முன்னெடுக்க பொலிஸார் இடமளிக்கவில்லை.

பின்னர் அவர்கள்  அவ்விடத்தில் இருந்து ஒதுங்கி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்பாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.