சொத்தி உபாலியின் மகன் கைது

சொத்தி உபாலியின் மகன் கைது

by Bella Dalima 05-01-2023 | 5:05 PM

Colombo (News 1st) குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான 'சொத்தி உபாலி' என்பவரின் மகன் ஹெரோயின் மற்றும் கூரான ஆயுதத்துடன் நாரஹேன்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடமிருந்து 8 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின், இரண்டு கத்திகள் மற்றும் வாள் ஒன்றும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். 

38 வயதான குறித்த சந்தேகநபரின் மனைவியும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.