கஞ்சிப்பானை இம்ரானை தேடும் தமிழக Q-பிரிவு பொலிஸார்

by Bella Dalima 05-01-2023 | 7:56 PM

Colombo (News 1st) பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் நாட்டிலிருந்து தப்பிச்சென்ற,  திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் தொடர்பில் தமிழக Q-பிரிவு பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர் வௌிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சிப்பானை இம்ரானை கைது செய்வதற்கு இந்தியாவின் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளதால், இது தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவும் தமிழக அரசிற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இதனால் தமிழக பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.
 
இராமேஷ்வரத்தில் மீனவர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக Q-பிரிவு பொலிஸார் கூறியுள்ளனர்.

தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்கள், அங்குள்ள மீனவ கிராமப் பகுதிகளிலும் தீவிரமாக தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக  Q-பிரிவு பொலிஸாரை மேற்கோள்காட்டி  The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.