.webp)
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிதியுதவி வழங்கியமை, சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 13,270 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சந்தேகநபர்களான நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேரின் பிணை கோரிக்கையை கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
தமித் தொடவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று குற்றப்பத்திரம் மீதான விசாரணை இடம்பெற்ற போதே பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகளை பிணையில் விடுவிப்பது பொருத்தமானதல்ல என்பது நீதிமன்றத்தின் தீர்மானம் என நீதிபதிகள் குழாமின் தலைவரான தமித் தொடவத்த சுட்டிக்காட்டினார்.
வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முன்னெடுப்பதற்கு இதன்போது நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.