தெற்கு அதிவேக வீதி பஸ் கட்டணம் குறைப்பு

தெற்கு அதிவேக வீதி பஸ் கட்டணம் 10 வீதத்தால் குறைப்பு

by Staff Writer 04-01-2023 | 12:03 PM

Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் பஸ் கட்டணம் இன்று(04) நள்ளிரவு முதல் 10 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(04) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர் இதனை கூறினார்.