.webp)
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை இதன்போது அவர்கள் பாராட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும் என கன்னி விக்னராஜா அறிவித்துள்ளார்.