.webp)
Colombo (News 1st) பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான கணக்கீடுகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டண திருத்தம், நாளைய தினம் (04) விடயத்திற்கு பொறுப்பான அமைச்சிடம் கையளிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா குறிப்பிட்டார்.
இரண்டு சந்தர்ப்பங்களில் டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்திற்கொண்டு குறித்த கணக்கீடுகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.