அமைச்சர் கஞ்சனவை நீக்குமாறு கோரிக்கை

அமைச்சர் கஞ்சனவை நீக்குமாறு மின்சார பொறியியலாளர்கள் கோரிக்கை

by Staff Writer 03-01-2023 | 8:21 PM

Colombo (News 1st) மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கும் பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை  நேற்று (02) முன்வைக்கப்பட்டாலும் இது தொடர்பிலான தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தான்தோன்றித்தனமாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு எடுக்கும் முயற்சி வெற்றி பெற இடமளிக்கப் போவதில்லை என மின்சார பொறியியலாளர் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தது.

பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடக்கூடிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
இதனிடையே, மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எடுக்கும் முயற்சிக்கு எதிராக 69 இலட்சம் பேரிடம் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகில் இன்று முன்னெடுக்கப்பட்டது.