கூட்டு பாலியல் வல்லுறவுடன் தொடர்புடைய நபர் கைது

யாழில் இடம்பெற்ற கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 10 வருடங்களின் பின்னர் கைது

by Bella Dalima 31-12-2022 | 5:29 PM

Colombo (News 1st) யாழ் - நெல்லியடியில் இடம்பெற்ற கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 10 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேகநபரை இன்று கைது செய்ததாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் 7 ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளி பகுதியில் 
பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே துன்னாலை மற்றும் கரவெட்டி பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய புலோலி - மந்திகையை சேர்ந்த பிரதான சந்தேகநபர், வௌிநாட்டிற்கு தப்பிச்சென்றதுடன் பின்னர் கொழும்பிற்கு வந்து தொழில் புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கொழும்பு - ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு - புதுக்கடை இலக்கம் 08 நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.