தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பில் இணைய தயார்

தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பில் இணைய தயார்: தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவிப்பு

by Staff Writer 31-12-2022 | 6:33 PM

Colombo (News 1st) தமிழ்  தேசிய கட்சிகள் அனைத்தும் ஒரே தலைமையின் கீழ் இணையும் முயற்சியை  வரவேற்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பரமசிவம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தையும் ஒரே தலைமையின் கீழ்  கொண்டு வரும் முயற்சி  வெற்றி பெற  மனதார வாழ்த்துவதாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை மையமாக வைத்து இணையாமல், தமிழர்களின் நலன் நோக்கியதாக ஒற்றுமை முயற்சி அமைய வேண்டும் என  அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராசா தலைமையில் உருவாகவுள்ள தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பில் தாம் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பரமசிவம் சிறீதரன் கூறியுள்ளார்.