இரண்டு தினங்களுக்கு மின்வெட்டு இல்லை

இரண்டு தினங்களுக்கு மின்வெட்டு இல்லை

by Staff Writer 30-12-2022 | 6:49 PM

Colombo (News 1st) நாளையும் (31) நாளை மறுதினமும் (01) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

மீண்டும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. 

இதற்கமைய, ஜனவரி 2 ஆம் திகதி முதல் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

A முதல் L வரையான வலயங்களிலும் P முதல் W வரையிலான வலயங்களிலும் பகல் வேளைகளில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளைகளில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.