அரச காணியை அம்பேவல பண்ணைக்கு வழங்க முடியுமா?

அரச காணியை அம்பேவல பண்ணைக்கு எவ்வாறு வழங்க முடியும்: ரட்ணஜீவன் ஹூல் ஜனாதிபதியிடம் கேள்வி

by Bella Dalima 30-12-2022 | 8:06 PM

Colombo (News 1st) அம்பேவலயில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பண்ணைக்கு 30 ஏக்கர் அரச காணியை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவு தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், குறித்த காணியை வழங்க வேறு தகுதியானவர்கள் இல்லையா எனவும் காணியை வழங்குவதற்காக ஜனாதிபதி இலஞ்சம் பெறவில்லை என்பதை நிரூபிக்க முடியுமா எனவும்  ரட்ணஜீவன் ஹூல் வினவியுள்ளார். 

ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை வெற்றி பெற வேண்டுமாயின், இவ்வாறு தான்தோன்றித்தனமாக அதிகாரத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.