மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கைது

by Bella Dalima 29-12-2022 | 8:11 PM

Colombo (News 1st) பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அநுராத விதானகே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரின் மகன் மீதான தாக்குதல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக அநுராத விதானகே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கிற்கு சென்று திரும்பிய போது அவர் கைது செய்யப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சமோத சத்சர தெரிவித்தார்.