.webp)
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், அக்கட்சியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளர் பதவிக்கான நியமனக் கடிதத்தை, கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞசித் மத்தும பண்டார, உமாச்சந்திரா பிரகாஷிடம் கையளித்தார்.