உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்

by Staff Writer 29-12-2022 | 8:19 PM

Colombo (News 1st) அரசியலமைப்பு பேரவைக்கான நியமனங்கள் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய தேவையை தோற்றுவித்து, தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சி உள்ளதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அரசியலமைப்பு பேரவைக்கான நியமனங்கள் தொடர்பில் இணக்கப்பாடின்றி இன்றைய கலந்துரையாடல் நிறைவுபெற்றுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று நடத்தியது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரச அச்சகர், தபால்மா அதிபர், தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்காக வேட்புமனு கோரல் திகதியை ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.