.webp)
Colombo (News 1st) பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவர் மற்றும் முன்னாள் தலைவரின் மாணவர் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முறையான விசாரணைகளுக்கு பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி உப வேந்தர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவர்கள் இருவரும் தமது விடுதிகளில் இருந்து வௌியேற வேண்டும் எனவும் பல்கலைக்கழகத்தின் அனைத்து கற்றல் செயற்பாடுகளில் இருந்தும் விலகியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.