இலங்கையர்கள் உள்ளிட்ட 27 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது

by Bella Dalima 28-12-2022 | 5:14 PM

Colombo (News 1st) ஹங்கேரிக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் உள்ளிட்ட 27  சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், எரித்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடைகள், இரும்பு போன்றவற்றை ஏற்றிச்சென்ற இரண்டு ட்ரக் வண்டிகளை சோதனையிட்டபோது, ​​அவர்கள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 21 முதல் 67 வயதிற்கு உட்பட்டவர்கள் அடங்குகின்றனர்.