.webp)
Colombo (News 1st) இந்திய அணிக்கு எதிரான T20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்திற்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குழாமின் உப தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
20 பேர் கொண்ட குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டினால் இன்று வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் ஷானக்க அணியை வழிநடத்தவுள்ளதுடன், ஒரு நாள் குழாமின் உப தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் உள்ளடக்கப்படாத சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்ன, டில்ஷான் மதுஷங்க, நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் நுவன் துஷார ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
3 ஒரு நாள் மற்றும் T20 போட்டிகள் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான தொடரில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 3 ஆம் திகதி மும்பையின் வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ள T20 போட்டியுடன் இந்த தொடர் ஆரம்பமாகின்றது.