9 பாதாளக்குழு உறுப்பினர்கள் தொடர்பில் CID ஆய்வு

இந்தியாவில் கைதான 9 பாதாளக்குழு உறுப்பினர்கள் தொடர்பில் CID புலனாய்வு

by Bella Dalima 28-12-2022 | 7:31 PM

Colombo (News 1st) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையின் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாளக்குழு உறுப்பினர்கள் 9 பேர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசேட புலனாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடையே இலங்கைக்கு  அழைத்துவரப்பட வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பில் அடையாளம் காண்பதே இதன் நோக்கம் என குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது. 

இதற்காக சந்தேகநபர்களின் தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களில் இருந்தும் கோரப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இந்த நடவடிக்கைக்காக விசேட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று விரைவில் இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.