சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா – பிணவறை ஊழியர் அதிர்ச்சி தகவல்

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா – பிணவறை ஊழியர் அதிர்ச்சி தகவல்

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா – பிணவறை ஊழியர் அதிர்ச்சி தகவல்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 Dec, 2022 | 7:54 am

Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பொலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங்கின்(Sushant Singh Rajput) மரணம் தொடர்பில் 2 வருடங்களின் பின்னர் தற்போது புதிய தகவலொன்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், 2020ஆம் ஆண்டு மும்பையில் வசித்து வந்த இல்லத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் தற்கொலை செய்துகொண்டதாக தான் பேசப்பட்டது.

ஆனால், அது தற்கொலை அல்ல கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அதிர்ச்சியூட்டும் தகவலை வழங்கியுள்ளார் பிணவறை தொழிலாளி ஒருவர்.

சுஷாந்தின் உடலை பார்த்ததும் கொலையாக இருக்கலாமென தோன்றியதெனவும் தமது மேலதிகாரியிடம் கூறியதாகவும் குறித்த தொழிலாளி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி இரவு வேளையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வை வீடியோ எடுக்காமல் புகைப்படம் மாத்திரமே எடுக்கப்பட்டதாக பிணவறை தொழிலாளி கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவினர் (Central Bureau of Investigation-CBI) விசாரணை செய்து வந்த நிலையில் இந்த கருத்து வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்