விவசாய குடும்பங்களுக்கு கொடுப்பனவு

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு கொடுப்பனவு - அமெரிக்க முகவர் நிலையம்

by Staff Writer 27-12-2022 | 9:47 AM

Colombo (News 1st) குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

07 மாவட்டங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் நெற்செய்கையாளர்களின் குடும்பங்களுக்கே இந்த கொடுப்பனவை வழங்க அமெரிக்க முகவர் நிலையம் தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில், மாதாந்தம் 41,500 ரூபாவை விட குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த கொடுப்பனவை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இரு கட்டங்களாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் A.M.H.L.அபேரத்ன தெரிவித்தார்.

இதனிடையே, ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக 08 பில்லியன் நிதியை நாடளாவிய ரீதியில் நெற்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் குடும்பங்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.