முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்கா பயணம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்கா பயணம்

by Staff Writer 26-12-2022 | 6:09 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, குடும்ப அங்கத்தவர்களுடன் இன்று(26) அமெரிக்காவிற்கு பயணித்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இன்று(26) அதிகாலை அவர் அமெரிக்காவிற்கு பயணித்துள்ளார். 

விமான நிலையத்தின் விசேட விருந்தினர்களுக்கான நுழைவாயில் ஊடாக துபாய்க்கு சென்று அதன் பின்னர் அங்கிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்கவுள்ளார்.

பாரியார் அயோமா ராஜபக்ஸ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஸ, மருமகள் S.D.ராஜபக்ஸ மற்றும் பேரப்பிள்ளை உள்ளிட்டோருடன் முன்னாள் ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு பயணித்துள்ளார்.