டிலான் சேனாநாயக்க கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

by Staff Writer 26-12-2022 | 2:26 PM

Colombo (News 1st) சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்க கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 14ஆம் திகதி இரவு நுகேகொடை, பாகொடை வீதியிலுள்ள டிலான் சேனாநாயக்கவின் ஸ்டுடியோவிற்குள் நுழைந்த இருவரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. 

கை மற்றும் காலில் வெட்டுக் காயங்களுக்குள்ளான டிலான் சேனாநாயக்க களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.