.webp)
Colombo (News 1st) தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதற்கு தமிழக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு 1,000 இந்திய ரூபா, தலா ஒரு கிலோ கிராம் அரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பைு வழங்குவதற்காக நாளை(27) முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் இரண்டு கோடி 19 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இம்முறை பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த திட்டத்திற்காக தமிழக அரசினால் 2,357 கோடி ரூபா நிதி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை எதிர்வரும் 02ஆம் திகதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.