அதிக மழையுடனான வானிலை ;1,600 பேர் பாதிப்பு

அதிக மழையுடனான வானிலையால் 1,600 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

by Staff Writer 26-12-2022 | 3:00 PM

Colombo (News 1st) அதிக மழையுடனான வானிலை காரணமாக 1,600 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 109 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கண்டி, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.