மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 2 பேர் பலி

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 25-12-2022 | 3:37 PM

Colombo (News 1st) கண்டி - அலவத்துகொட, கணபதிவத்தை பிரதேசத்தில் இன்று(25) காலை வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 16 மற்றும் 18 வயதான இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதன்போது காயமடைந்த மூவர் ஜம்புகஹபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.