.webp)

Colombo (News 1st) கொழும்பு - பதுளை மற்றும் பதுளை - கொழும்பிற்கு இடையில் பயணிக்கவிருந்த தபால் ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்றிரவு(25) பயணத்தை ஆரம்பிக்கவிருந்த தபால் ரயில் சேவை இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செரவிரத்ன தெரிவித்தார்.
இதனிடையே, நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று(25) கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த விசேட ரயிலொன்றும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
