நோயாளியுடன் சென்ற அம்பியூலன்ஸுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 25-12-2022 | 5:18 PM

Colombo (News 1st) முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியின்  A9 வீதியில் நேற்று(24) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் நோயாளருடன் பயணித்த அம்பியூலன்ஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மல்லாவியிலிருந்து சிறுநீரக நோயாளி ஒருவரை அவசர சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற அம்பியூலன்ஸ் வண்டியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர் 1990 இலக்க அவசர சேவை ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த விபத்தில் கிளிநொச்சி - கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சுப்பிரமணியம் என்பவரே உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.