.webp)

Colombo (News 1st) புத் அகம் திறந்து புத்தகம் அன்பளிப்போம் எனும் நாமத்துடன், சக்தி - சிரச புத்தக நிவாரண யாத்திரையின் புத்தக விநியோக நடவடிக்கை இன்று(25) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் சிறார்களின் அடுத்த வருடத்திற்கான கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக ஆரம்பிப்பதற்கான உதவிகளை வழங்கும் நோக்கில் சக்தி - சிரச புத்தக யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புத்தக யாத்திரையூடாக கற்றல் உபகரணங்களை சேகரிக்கும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
