காணாமல் போயிருந்த சிறுவன் 5 நாட்களின் பின் மீட்பு

எப்பாவல, கிரலோகமவில் காணாமல் போன சிறுவன் கண்டி, ரிக்கிலகஸ்கடவில் மீட்பு

by Rajalingam Thrisanno 24-12-2022 | 2:52 PM

எப்பாவல, கிரலோகம பிரதேசத்தில் காணாமல் போயிருந்த 09 வயதுடைய சிறுவன் கண்டி, ரிக்கிலகஸ்கட - ஜோஸ்லன் தோட்டத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவனை அழைத்துச் சென்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி இரவு முதல் குறித்த சிறுவன் காணாமல் போயிருந்தார்.

சிறுவனை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் தாய் முறைப்பாடு செய்ததுடன் அதன் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.