பெரும்போகத்தில் அறுவடைக்கு இலவச மண்ணெண்ணெய்

பெரும்போகத்தில் அறுவடைக்கு இலவச மண்ணெண்ணெய்

by Rajalingam Thrisanno 23-12-2022 | 7:09 PM

சீனாவால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெயில் 6 தசம் ஒன்பது எட்டு மில்லியன் லீற்றரை நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனை நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

சீனாவினால் 10 தசம் பூச்சியம் ஆறு மில்லியன் லீற்றர் மண்ணெண்ணெய் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் எஞ்சிய தொகை மீனவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.