புத்அகம் திறந்து புத்தகம் அன்பளிப்போம்

சக்தி-சிரச முன்னெடுக்கும் புத்அகம் திறந்து புத்தகம் அன்பளிப்போம்

by Rajalingam Thrisanno 23-12-2022 | 7:26 PM

கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பால் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த காலங்களில் உங்களின் கவனத்திற்கு நாம் கொண்டுவந்தோம். 

வெறுமனே கதைப்பதால் மாத்திரம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. 

ஆதலால் பாடசாலை பிள்ளைகளுக்கான வேலைத் திட்டமொன்றை நாம் ஆரம்பித்தோம்.

சக்தி - சிரசவினால் முன்னெடுக்கப்படும் புத்அகம் திறந்து புத்தகம் அன்பளிப்போம் எனும் நாமத்துடன் புத்தக நிவாரண யாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது.

எம் அனைவருக்கும் கடினமான காலகட்டம் இதுவென நாம் அறிவோம். 

எனினும், பிள்ளைகளுக்காக உதவி செய்ய பலரும் முன்வந்துள்ளனர்.

நன்கொடையாக வழங்கப்பட்ட புத்தகங்கள், கற்றல் உபகரணங்களை தற்போது பிள்ளைகளிடம் ஒப்படைக்க நாம் தயாராகி வருகின்றோம்.

பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட உங்களுக்கும் நாளை வரை சந்தர்ப்பம் உள்ளது.

கொழும்பு 02 கெப்பிட்டல் மகாராஜா குழும தலைமை அலுவலகம், தெபானம கலையகம், இரத்மலானை ஸ்டெயின் கலையகம், கொழும்பு எச்சலோன் சதுக்கம், கண்டி சிட்டி சென்டர் ஆகிய இடங்களில் கற்றல் உபகரணங்களை நீங்கள் வழங்கலாம். 

இம்முறை நத்தாரை எமது பிள்ளைகளுக்காக அர்ப்பணிப்போம்.